ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட ஆதாரத்தால் தலை குனிந்து நிற்கும் வெள்ளைமாளிகையும் டொனால்ட் டிரம்மும்!

990shares
Image

சமீபத்தில் G7 மாநாட்டின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டதால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்மும், அமெரிக்க வெள்ளைமாளிகையும் ”தலை குனிய” நேரிட்டுள்ளது.

அந்த புகைப்படத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அருகில் நிற்கும் 6'2'' உயரம் உள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டிரம்பை விட உயரமாக காட்சியளிக்கிறார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி வெளியிடப்பட்ட அமெரிக்க அதிபரின் மருத்துவ அறிக்கையில் அவரது உயரம் 6'3'' (75 இன்ஞ்) என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள படத்தால் வெள்ளை மாளிகை பொய் சொல்லியுள்ளதா என கேள்வி எழுந்துள்ளது.

அது மட்டுமின்றி டிரம்பின் தற்போதைய எடையின்படி (236 பவுண்டுகள்) 6'3'' உயரம் உள்ள அவரின் BMI 29.9 ஆகும். இந்த BMI, 30 ஆக இருந்தால் டிரம்ப் குண்டானவர்கள் பட்டியலில் இடம்பெற வேண்டும், அதை தவிர்ப்பதற்காகவே அவரது மருத்துவ அறிக்கை பொய்யான தகவல்களுடன் தயாரிக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

2016 தேர்தலுக்குமுன் டிரம்பின் நீண்ட நாள் மருத்துவரான Dr. Harold Bornstein ஒரு மருத்துவ அறிக்கையை வெளியிட்டு அதின்படி டிரம்ப் சிறப்பான உடல் நலத்துடன் இருப்பதாகக் கூறியிருந்தார்.

டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இதுவரை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிலேயே அவர்தான் சிறந்த உடல் நலமுடையவர் என ஏகமனதாக நான் தெரிவிக்கிறேன் என்று அவர் கூறியிருந்தார்.

ஆனால் பின்னர் அவர் அந்த கடிதத்தை டிரம்ப் சொல்லச் சொல்ல தான் பூர்த்தி செய்ததாக கூறி பின் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

தற்போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட படம் பழைய உண்மைகளை கிளறி, உண்மையாகவே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை ”தலை குனிய” வைத்துள்ளது என்றே கூறலாம்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
போதநாயகி வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா? பலத்த சந்தேகத்தைக் கிழப்பியுள்ள கடைசி வரிகள்!!

போதநாயகி வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா? பலத்த சந்தேகத்தைக் கிழப்பியுள்ள கடைசி வரிகள்!!

நாட்டையே உலுக்கிய இளம் பெண் மரணத்துக்கான அதிர்ச்சிக் காரணம் வெளியானது!

நாட்டையே உலுக்கிய இளம் பெண் மரணத்துக்கான அதிர்ச்சிக் காரணம் வெளியானது!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!