உலகமே எதிர்பார்க்கும் சிங்கப்பூர் சந்திப்பு; பேச்சுவார்த்தைக்கு வந்த டிரம்மை வரவேற்ற தமிழன் இவர்தான்!

1339shares
Image

சிங்கப்பூரில் வடகொரிய ஜனாதிபதியை சந்திக்க வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை, அந்நாட்டின் அமைச்சரும், தமிழருமான விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரிய, அமெரிக்க நாடுகளின் ஜனாதிபதிகள் உலக அமைதிக்கான பேச்சுவார்த்தைக்காக சிங்கப்பூரில் நாளைய தினம் (12.06.2018) சந்திக்க உள்ளனர்.

இந்த சந்திப்பிற்காக முதலில் (நேற்று) வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சிங்கப்பூர் சென்றடைந்ததுடன் அந்நாட்டு பிரதமரையும் சந்தித்து பேசியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும் நேற்று (10.06.2018) இரவு 8.30 மணிக்கு சிங்கப்பூர் சென்ற நிலையில் அங்கு அவருக்கு சிங்கப்பூர் அமைச்சரும், தமிழருமான விவியன் பாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்பு அளித்தார்.

நாளை (12.06.2018) சிங்கப்பூரில் நடைபெறவுள்ள இருநாட்டு ஜனாதிபதிகளின் பேச்சுவர்த்தையை உலகமே எதிர்நோக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?