கிம் யொங் வுன்னை தொடர்ந்து லீ சீன் லூங்கை சந்தித்த டொனால்ட் ட்ரம்ப்; முக்கிய விடயம் தொடர்பில் கலந்துரையாடல்!

67shares
Image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங்கிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

வடகொரிய தலைவருடனான வரலாற்றுமிக்க சந்திப்பை முன்னிட்டு நேற்று (10.06.2018) சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே இன்று (11.06.2018) இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளின் உறவுகள் தொடர்பில் ஆரயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாளை (12.06.2018) வடகொரிய தலைவர் கிம்முடன் இடம்பெறவுள்ள சந்திப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை இடம்பெறவுள்ள இந்த சந்திப்பிற்கு முன்னர் சந்திப்பு குறித்த நிகழ்ச்சி நிரலை வெளியிடுவதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, குறித்த சந்திப்பை உலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?