இன்று காட்டு ராஜா தினம், அழிவின் விழிம்பில் ராஜா!

28shares
Image

ஆண்டுதோறும் ஓகஸ்ட் 10-ம் தேதி உலக சிங்க தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.திறந்த புல்வெளி காடுகளின் அழிவாலும், கடுமையான வேட்டையாலும் சிங்கங்கள் அழிவைச் சந்திக்கின்றன. சிங்கங்களைப் பாதுகாக்கவும், அது தொடர்பாக மக்கள் விழிப்புணர்வு அடையவும் கென்யா வன உயிரின ஆர்வலர்களின் முயற்சியால் இந்த நாள் முதலில் கடைபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழு வதும் சிங்கங்களின் நலன் பேணும் விழிப்புணர்வு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உலகில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை 2 லட்சத்துக்கும் மேல் இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை இன்று வெறும் 20 ஆயிரமாக குறைந்துவிட்டது. அவற்றிலும் ஆசிய சிங்கங்கள் 500க்கும் குறைவாகவே உள்ளன. மன்னர்கள் காலத்தில் இருந்து சிம்மம் என்னும் சொல் தலைவன், அரசன் என்பதை குறிக்கும் சொல்லாகவே கருதப்படுகிறது. உதாரணமாக சிம்மாசனம், சிம்ம சொப்பனம் என்று பல சொற்களை குறிப்பிடலாம். ஆற்றலின் அடையாளமாகவே சிங்கம் அடையாளப் படுத்தப்படுகிறது.

இந்த வழக்கம் நமது நாட்டில் மட்டும் அல்ல, ஆப்பிரிக்க பழங்குடிகள் தொடங்கி ஐரோப்பா வரை இருந்துவருகிறது. பூனை இனங்களில் புலிகளுக்கு முன்னர் மிகக் கடுமையான அழிவை சந்தித்தவை சிங்கங்களே. கிட்டத்தட்ட 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இவற்றின் அழிவு தொடங்கிவிட்டது. அரசர்கள் வேட்டையாடிய போதும், போர்களின் போதும் நாடு விட்டு நாடு பயணம் செல்லும் வேளைகளிலும், வீர விளையாட்டு என்ற பெயரில் சிறைப் பிடிக்கப்பட்டு கொன்றழிக்கப்பட்ட சிங்கங்கள் எண்ணிக்கையில் அடங்காதவை.

இவற்றை விட

பிரிக்க சிங்கங்கள் இனத்தில் 7 இனங்களும், ஆசிய இனத்தில் ஒரே ஒரு இனமும் மட்டுமே மீதம் உள்ளன. ஆப்பிரிக்க இனங்களின் ஒன்று பார்பெரி சிங்கம், இவை ஐரோப்பா, வடமேற்கு ஆப்பிரிக்க பகுதிகளில் காணப்பட்டன. இவை தற்போது காடுகளில் முழுமையாக வேட்டையாடப்பட்டு விலங்கு காட்சியகங்களில் மட்டுமே சொற்ப எண்ணிக்கையில் எஞ்சியுள்ளன. இரண்டாவது, செனகல் சிங்கங்கள் எனும் மேற்கு ஆபிரிக்க சிங்கங்கள். இவையும் அழிவின் விளிம்பில் உள்ளன.

மூன்றாவது காங்கோ சிங்கம் அல்லது உகாண்டா சிங்கம் என்ற இனம். இவை காங்கோவில் உள்ள தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நான்காவது, கட்டாங்கா சிங்கங்கள் அல்லது தென் மேற்கு ஆப்பிரிக்க சிங்கங்கள். ஐந்தாவது மசாய் சிங்கங்கள் அல்லது கிழக்கு ஆப்பிரிக்க சிங்கங்கள். இவை மிக அழகானவையாக கருதப்படுகின்றன. அதன் நீண்ட கால்களும், சீரான பிடரி முடிகளும், அழுத்தமான முக அமைப்பும் தனி அடையாளமாக திகழ்கின்றன.

ஆறாவது, கலகாரி சிங்கங்கள் அல்லது தென்கிழக்கு ஆப்பிரிக்க சிங்கங்கள். இவை மசாய் சிங்கங்களைப் போன்றே மிகப் பெரியவை. ஏழாவது, எத்தியோப்பிய சிங்கங்கள். இவை வெகு சமீப காலத்தில்தான் மரபணு சோதனையின் மூலம் கிழக்கு ஆப்பிரிக்க வகை சிங்கங்களில் இருந்து தனி இனமாக அறிவிக்கப்பட்டன. இதன் சிறப்பு அடர்ந்த பிடரி முடியில் இருக்கும் கருப்பு வண்ணமே.இந்த 7 வகை சிங்கங்களைத் தவிர, துருக்கியில் இருந்து தென்மேற்கு ஆசியா முழுவதும் பரவி இருந்த ஆசிய சிங்கங்கள் இன்று இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மட்டுமே உள்ளன.

ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை மிகவும் அருகிவிட்டன. திடீரென பரவும் தொற்றுநோய்கள், ஒரே குடும்பங்களுக்குள் நேரும் இனச்சேர்க்கையினால் பலவீனம் அடைதல், இடநெருக்கடிகளால் காடுகளை விட்டு வெளியேறும் சிங்கங்களால் ஏற்படும் மனித விலங்கு மோதல்கள் போன்ற பிரச்சினைகளை ஆசிய சிங்கங்கள் எதிர்கொள்கின்றன.

அரசர் காலத்தில் சிங்கங்கள் பெரிய அழிவைச் சந்தித்திருந்தாலும், தற்போதுள்ள பிரச்சினைகளை களைய நடவடிக்கை மேற்கொண்டு வன உயிர்களை காப்பதன் மூலம் இயற்கையின் சம நிலையை நிலை நிறுத்தினால் நமக்குத் தேவையான நீர், காற்று, ஆரோக்கியம் போன்றவற்றைப் பெறலாம்.

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையைச் சூழ்ந்துள்ள சிவப்பு வளையம்! அவசர எச்சரிக்கை!!

இலங்கையைச் சூழ்ந்துள்ள சிவப்பு வளையம்! அவசர எச்சரிக்கை!!

கொழும்பை அதிரவைத்த தமிழ்ப் பெண்ணின் சாவு; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

கொழும்பை அதிரவைத்த தமிழ்ப் பெண்ணின் சாவு; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

தமிழ் பெண்னின் தாலியைத் திருடினார் வைத்தியர்!! கர்ப்பிணித்தாயின் பரபரப்பு வாக்குமூலம்!(வீடியோ)

தமிழ் பெண்னின் தாலியைத் திருடினார் வைத்தியர்!! கர்ப்பிணித்தாயின் பரபரப்பு வாக்குமூலம்!(வீடியோ)