தமிழீழ விடுதலைப்புலிகளுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் மற்றுமொரு குழு!

316shares
Image

நாட்டில் மீண்டும் படுகொலைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ள பாதாள உலக கும்பல்கள், தமிழீழ விடுதலை புலிகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச புதிய தகவலொன்றை கண்டுபிடித்துள்ளார்.

ஸ்ரீலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தை கவிழ்த்து விரைவில் ஆட்சியை கைப்பற்றுவேன் என்று சூளுரைத்துவரும் நிலையிலேயே மஹிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஸ்ரீலங்காவின் தென்பகுதி பிரதேசமான காலி மாவட்டத்தின் கரந்தெனிய பகுதியில் படுகொலை செய்யப்பட்ட கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் டெனால்ட் ரணவீரவின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதாள உலக கோஷ்டிகளின் நடவடிக்கைகள் அண்மைக்காலமாக தீவிரமடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

எனினும் ஆட்சியிலுள்ளவர்களோ இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்காது கண்டும் காணாதவர்களைப்போல் இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ள மஹிந்த, இந்த நிலை நாட்டிற்கு நல்லதல்ல என்றும் எச்சரித்துள்ளார்.

கடந்த காலங்களில் தலைதூக்கிய பாதாள உலக கும்பல்களை முழுமையாக தாங்கள் அழித்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எனினும் இம்முறை நாடு முழுவதிலும் தலைதூக்கியுள்ள பாதாள உலக கும்பல்கள், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலமைகள் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகவும்ஆபத்தானவை என்று குறிப்பிடும் மஹிந்த இவற்றை கண்மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் 2009-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் திகதியுடன் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டதாக அறிவித்திருந்த ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒன்பது வருடங்களுக்குப் பின்னர் அவர் முழமையாக அழித்து விட்டதாக கூறிய தமிழீழ விடுதலை புலிகள் தென்னிலங்கையில் பாரதூரமான குற்ற செயல்களில் ஈடுபட்டுவரும் பாதாள உலகக் கோஷ்டியினருடன் இணைந்து செயற்படுவதாக தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?