எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் - உயர்நீதிமன்றம் அதிரடி.!

26shares
Image

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் வழக்கினை சிபிஐக்கு மாற்ற அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

தமிழக முதல்வர் பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறையின், ஒப்பந்த பணிகளை தனது உறவினர்களுக்கு வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த இந்த வழக்கில் தற்போது விசாரணை நடந்து வருகிறது.முதலில் ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தார்.

லஞ்ச ஒழிப்புத் துறைதான் இந்த வழக்கை விசாரித்து வந்தது. இதில் கிட்டத்தட்ட 4,800 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்த பணிகளில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை என்பது முதல்வருக்கு கீழே செயல்படக்கூடிய ஒரு அமைப்பு. அதனால் இதில் பெரிய அளவில் எந்த விசாரணையும் செய்யப்படாமல், வழக்கில் முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தது. இதனால் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் தற்போது புதிய திருப்பமாக சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக லஞ்ச ஒழிப்பு துறை இந்த விவகாரத்தில் முறையாக விசாரிக்கவில்லை. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை மிகவும் மெத்தனமாக செயல்பட்டுள்ளது. இதனால் விசாரணையை சிபிஐ மேற்கொள்ளட்டும். 3 மாதத்தில் சிபிஐ முதல் கட்ட விசாரணையை முடிக்க வேண்டும். இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
யாழ்ப்பாணம் சுடலையொன்றில் நிகழ்ந்த அதிசயம்; அதிர்ச்சியில் நெகிழ்ந்துபோன உறவினர்கள்!

யாழ்ப்பாணம் சுடலையொன்றில் நிகழ்ந்த அதிசயம்; அதிர்ச்சியில் நெகிழ்ந்துபோன உறவினர்கள்!

இலங்கையில் நேற்றிரவு மயானத்திற்கு அருகால் சென்றவரை திடீரென்று அடித்துக்கொன்ற கறுத்த உருவம்!

இலங்கையில் நேற்றிரவு மயானத்திற்கு அருகால் சென்றவரை திடீரென்று அடித்துக்கொன்ற கறுத்த உருவம்!

கொடுமையிலும் கொடுமை; ஐந்து குழந்தைகளை கிணற்றுள் வீசி தானும் குதித்த தாய்! (படங்கள்)

கொடுமையிலும் கொடுமை; ஐந்து குழந்தைகளை கிணற்றுள் வீசி தானும் குதித்த தாய்! (படங்கள்)