அலைக்கழிக்கப்படும் திருமுருகன் காந்தி.. அதிர்ச்சியளிக்கும் அரசின் முடிவு.!

35shares

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக்கோரி நடைபெற்ற மக்கள்திரள் ஆர்ப்பாட்டத்தின் போது அரசின் துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்த 13 பொதுமக்களின் உயிருக்கு நீதி கேட்டும், அரசின் கார்ப்பரேட் ஆதரவு போக்கினையும் சுட்டிக்காட்டி கடந்த ஜூன் மாதம் சமூக வலைத்தளங்களில் திருமுருகன் காந்தி காணொளி வெளியிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உடனடியாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆனால், திருமுருகன் காந்தி விசாரணைக்கு ஆஜராகவில்லை.

மாறாக, ஐ.நாவில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து பேசி அந்த விவகாரத்தினை உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதன் காரணமாக கோபமடைந்த மத்திய - மாநில அரசுகள் திருமுருகன் காந்தியை அப்போதே முடக்க திட்டமிட்டன. ஆனால், அவர் வெளிநாட்டில் இருந்ததால் அது இயலவில்லை. அதே சமயம், திருமுருகன் காந்திக்கு லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தான்,நேற்றைய தினம் பெங்களூரு விமான நிலையம் வந்த திருமுருகன் காந்தியை கைது செய்தது குடிவரவுத்துறை. இந்த விவகாரம் உடனடியாக தமிழக காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் உடனடியாக அங்கு விரைந்து திருமுருகன் காந்தியை கைது செய்து தமிழக கொண்டுவந்தனர்.

காலை 8 மணியளவில் எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்புக்கு கொண்டுவரப்பட்ட அவரை, மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் காவல்துறை ரிமாண்ட் செய்துள்ளதாக தெரிகிறது.

மக்களுக்கு எதிரான அரசுகளின் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டினால் கைது நடவடிக்கையா, அவருக்கு ஏதேனும் நேர்ந்தால் தமிழக காவல்துறையும் - அரசுமே பொறுப்பு என கொந்தளிக்கின்றனர் மே 17 இயக்கத்தினர்.

இதையும் தவறாமல் படிங்க
யாழை சேர்ந்த இளைஞனுக்கு ஏ-9 வீதியில் நேர்ந்த கோரம்; அதிர்ச்சியில் உறவினர்கள்! வீடியோ.

யாழை சேர்ந்த இளைஞனுக்கு ஏ-9 வீதியில் நேர்ந்த கோரம்; அதிர்ச்சியில் உறவினர்கள்! வீடியோ.

வவுனியாவில் கணவரை தேடியலைந்த மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

வவுனியாவில் கணவரை தேடியலைந்த மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

இலங்கையில் மாற்று திறனாளிகளை அவமதித்து பாரதிராஜாவின் படத்திற்கு அழைத்து செல்லப்பட்ட பார்வையாளர்கள்?

இலங்கையில் மாற்று திறனாளிகளை அவமதித்து பாரதிராஜாவின் படத்திற்கு அழைத்து செல்லப்பட்ட பார்வையாளர்கள்?