தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி - ஸ்டாலின்!

8shares
Image

தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி என 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பான தீர்ப்பு குறித்து, திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கருத்து பதிவிட்டுள்ளார்.

சபாநாயகர் தனபால் 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது தொடர்பாக, கடந்த 9 மாதங்களாக நீடித்து வந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜீ, சபாநாயகர் உத்தரவு செல்லும் எனவும், நீதிபதி சுந்தர் சபாநாயகரின் உத்தரவு செல்லாது எனவும் தீர்ப்பளித்தார். இரு நீதிபதிகளின் கருத்தும் மாறுபட்டு இருந்ததால் வழக்கின் தீர்ப்பு மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதனால் தீர்ப்பு வர மேலும் காலதாமதம் ஆகலாம் என பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில்,"ஜனநாயக மாண்பினை காப்பதில் நீதிமன்றங்கள் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில், தெளிவான-நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்கவேண்டும். தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி என்பதுடன் பெரும் காலதாமதத்தால் பயனற்றதாகிவிடும். அதனைநீதிமன்றம் தவிர்க்கும் என நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?