மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் ரத்து - உயர்நீதிமன்றம்!

14shares
Image

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

கடந்த ஆண்டு மே 27ம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக செல்லத்துரை நியமனம் செய்யப்பட்டார். ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது பேராசிரியராக பணியாற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், செல்லத்துரை பேராசிரியராக பணியாற்றியதில்லை என்ற குற்றசாட்டு எழுந்தது.

செல்லத்துரையின் நியமனத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்த நிலையில், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, செல்லதுரையின் நியமனத்தை மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இதனை விசாரித்த நீதிமன்றம், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரையின் நியமனத்தை ரத்து செய்ததோடு, புதிய குழு ஒன்றை அமைத்து துணைவேந்தரை தேர்வு செய்ய உத்தரவிட்டார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?