சமூக வலைத்தளங்களில் வைரலாகும் மோடியின் உடற்பயிற்சி வீடியோ.!

20shares

பிரதமர் மோடி நேற்றைய தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட உடற்பயிற்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்வர்தன் சிங் ராத்தோர் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டார். அதில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி, ரித்திக் ரோஷன் மற்றும் சாய்னா நேவால் ஆகியோரை டேக் செய்து அவர்களுக்கு 'பிட்னஸ் சவால்' விடுத்தார். அவரின் சவாலை ஏற்றுக்கொண்ட விராட் கோலி தன் உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டு, தன் மனைவி அனுஷ்கா சர்மா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஆகியோருக்கு சவால் விடுத்தார்.

கோலியின் சவாலை தான் ஏற்றுக்கொள்வதாக ட்விட்டரில் அறிவித்த பிரதமர் மோடி தற்போது அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

பிரதமரின் உடற்பயிற்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனதுதான் அதிகளவில் கிண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டது. அதே சமயம், உடற்பயிற்சி செய்வதன் அவசியத்தினை பொதுமக்களுக்கு உணர்த்திடும் வகையில் பிரதமரின் உடற்பயிற்சி வீடியோ உள்ளதாகவும் சில கருத்து தெரிவிக்கின்றனர்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி; இனி ஆங்கிலம் தேவையில்லை!

தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி; இனி ஆங்கிலம் தேவையில்லை!

மடுத்திருத்தலத்தில் பதற்றத்துடன் நேரத்தைக்கடக்கும் பக்தர்கள்!

மடுத்திருத்தலத்தில் பதற்றத்துடன் நேரத்தைக்கடக்கும் பக்தர்கள்!

விடுமுறையில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த கொடுமை!

விடுமுறையில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த கொடுமை!