18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு ; பதற்றத்தில் எடப்பாடி அரசு.!

155shares

தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று பகல் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதால் பதற்றத்தில் உள்ளது தமிழக அரசியல் அரங்கு.

தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் சரியாக இல்லாத காரணத்தினால் முதல்வரையும், குறிப்பிட்ட சில அமைச்சர்களையும் மாற்ற வேண்டுமென ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதே சமயம், அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் தனபால்.

தங்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என கூறி நீதிமன்றத்தினை நாடியது தினகரன் தரப்பு. இது தொடர்பான வழக்கு விசாரணை நெடுநாட்களாக நடைபெற்றுவந்த நிலையில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுமென அறிவித்துள்ளது உயர்நீதிமன்றம். இதன் காரணமாக அரசியல் அரங்கு பதற்றத்தில் ஆழ்ந்துள்ளது.

முன்னதாக, நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் ஆதரவு 11 எம்எல்ஏக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?