ஊடகங்கள் சமூக பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் - முதல்வர் அறிவுரை.!

17shares

கடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னணி தமிழ் செய்தி தொலைக்காட்சியொன்று ஒருங்கிணைத்து நடத்திய விவாத நிகழ்ச்சியில் மோதல் ஏற்படும் சூழல் உருவான காரணத்தினால், பாதியிலேயே அந்த விவாத நிகழ்ச்சி முடித்துவைக்கப்பட்டது. மேலும், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தொலைக்காட்சி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் சலசலப்பினை கிளப்பியது.

இந்த நிலையில் சட்டப்பேரவையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த முதல்வர் பழனிசாமி "தமிழகத்தில் போராட்டங்கள் அதிகப்படியாக நடைபெறுவது ஏன்? என்ற தலைப்பில் நடத்தப்பட்ட அந்த விவாத நிகழ்ச்சிக்கு காவல்துறை சார்பில் அனுமதி அளிக்கப்படவில்லை எனவும், அதனையும் மீறி விவாத நிகழ்ச்சி நடத்தியது மட்டுமின்றி மோதல் ஏற்படும் சூழலை உண்டாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கருத்துரிமைக்கு எவ்வித பங்கமும் எங்கள் அரசால் ஏற்படாது. அதே வேளையில், ஊடகங்கள் சமூக பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும்" என அறிவுறுத்தினார்.

முன்னதாக, குறிப்பிட்ட தொலைக்காட்சி மீது தொடுக்கப்பட்ட வழக்கினை அரசு திரும்ப பெற வேண்டுமென அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தும் குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
போதநாயகி வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா? பலத்த சந்தேகத்தைக் கிழப்பியுள்ள கடைசி வரிகள்!!

போதநாயகி வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா? பலத்த சந்தேகத்தைக் கிழப்பியுள்ள கடைசி வரிகள்!!

நாட்டையே உலுக்கிய இளம் பெண் மரணத்துக்கான அதிர்ச்சிக் காரணம் வெளியானது!

நாட்டையே உலுக்கிய இளம் பெண் மரணத்துக்கான அதிர்ச்சிக் காரணம் வெளியானது!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!