பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ; தவாகவினர் 27 பேர் கைது.!

21shares

பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த காரணத்திற்காக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சுமார் 27 பேரை கைது செய்துள்ளது தமிழக காவல்துறை.

உளுந்தூர் பேட்டை சுங்க சாவடியை அடித்து நொறுக்கிய காரணத்திற்காக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளது தமிழக காவல்துறை. தொடர்ச்சியாக தமிழர் வாழ்வுரிமைக்கான போராட்டங்களை மக்களை திரட்டி போராட்டங்களை முன்னெடுத்ததன் காரணத்தினாலேயே அவர் மீது தேச பாதுகாப்பு சட்டத்தின் படி வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனநாயக சக்திகள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில், வேல்முருகன் கைது செய்யப்பட்டதனை கண்டித்து கடலூரில் தவாகவினரின் சார்பில் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. அப்போது, ஏராளமான மதுக்கடைகள் சூறையாடப்பட்டன. அதில் ஈடுபட்டதாக கூறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சுமார் 27 பேரை கைது செய்துள்ளது தமிழக காவல்துறை. இதன் காரணமாக அப்பகுதியே பரபரப்புடன் காணப்படுகிறது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
அதிவிசேட செய்தி: மீண்டும் மைத்திரியின் திடீர் நடவடிக்கை; அதிர்ச்சியில் ரணில் தரப்பு!

அதிவிசேட செய்தி: மீண்டும் மைத்திரியின் திடீர் நடவடிக்கை; அதிர்ச்சியில் ரணில் தரப்பு!

யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளி; தற்போதைய நிலவரம் என்ன?

யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளி; தற்போதைய நிலவரம் என்ன?

யாழில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கிய  கஜா புயல்; நேரடி ரிப்போர்ட் இதோ!

யாழில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கிய கஜா புயல்; நேரடி ரிப்போர்ட் இதோ!