எஸ்.வி சேகரை கைது செய்ய பாஜக தடையாக இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்.!

9shares

பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி சேகரை கைது செய்ய பாஜக தடையாக இல்லை என தெரிவித்துள்ளார் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டிருந்தார் பாஜக பிரமுகர் எஸ்.வி சேகர். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் எஸ்.வி சேகரின் மீது பதியப்பட்டிருந்த வழக்கின் அடிப்படையில் அவரை கைது செய்ய உத்தரவிட்டிருந்தது சென்னை உயர்நீதிமன்றம். ஆனால், இன்னமும் எஸ்.வி சேகரை கைது செய்யவில்லை காவல்துறை.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொன்.ராதாகிருஷ்ணன், "எஸ்.வி சேகரை கைது செய்ய கூடாதென பாஜக தரப்பிலிருந்து காவல்துறைக்கு எவ்வித அழுத்தம் கொடுக்கப்படவில்லை. எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன் என்பது பற்றி முதல்வர், டிஜிபியிடம்தான் கேட்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?