சீமான், வைகோவை கைது செய்ய வேண்டும் - ஹெச்.ராஜா பாய்ச்சல்.!

123shares

தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் பல்வேறு போராட்டங்களுக்கு நாம் தமிழர், மதிமுக, மக்கள் அதிகாரம் போன்ற கட்சிகள் மற்றும் இயக்கங்களே காரணம் எனவும், தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ வேண்டுமேயானால் அரசு உடனடியாக சீமான் மற்றும் வைகோவை கைது செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார் பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பிறகு பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி பலதரப்பட்ட மக்கள் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன. தமிழக அரசு மீதும் மத்திய பாஜக அரசு மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதன் காரணமாகவே இத்தகைய போராட்டங்கள் அதிகரித்துவருவதாகவும், போராட்டங்களை ஒடுக்க வேண்டுமேயானால் குறிப்பிட்ட இயக்கங்களின் செயற்பாடுகளை முடக்கிட வேண்டுமெனவும் ஆளுநர் வட்டாரம் மத்திய அரசுக்கு தகவல் அளித்துள்ளதனை தொடர்ந்து வேல்முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு தேச பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, "தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் பல்வேறு போராட்டங்களுக்கு நாம் தமிழர், மதிமுக, மக்கள் அதிகாரம் போன்ற கட்சிகள் மற்றும் இயக்கங்களே காரணம், அரை நக்ஸலைட்டுகளாக மாறிவிட்ட சீமானையும், வைகோவையும் அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?