இயக்குனர் அமீரை கொலை செய்ய சதி?

41shares
Image

இயக்குனர் அமீரை ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சி செய்து வருவதாக இயக்குனர் பாரதிராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய விவாத நிகழ்ச்சியின் போது, தமிழ்நாடு கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் இயக்குநர் அமீர் பேசிய கருத்துக்களுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அமீர் மற்றும் சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி மீது காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. இந்த நிலையில் இயக்குனர் அமீருக்கு ஒரு கும்பல் கொலை மிரட்டல் விடுவதாக, இயக்குநர்கள் பாரதி ராஜா, அமீர், வெற்றி மாறன் ஆகியோர் இணைந்து டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் பாரதிராஜா, தமிழகத்தில் கடந்த ஓராண்டாக நடக்கும் கொடுமை மன்னர் ஆட்சியில் கூட இருந்ததில்லை என கூறினார். மேலும், மக்களுக்கான அரசாக இல்லாமல், அந்நிய அரசாக தமிழக அரசு இருப்பதாக தெரிகிறது எனவும் குற்றம் சாட்டினார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
அதிவிசேட செய்தி: மீண்டும் மைத்திரியின் திடீர் நடவடிக்கை; அதிர்ச்சியில் ரணில் தரப்பு!

அதிவிசேட செய்தி: மீண்டும் மைத்திரியின் திடீர் நடவடிக்கை; அதிர்ச்சியில் ரணில் தரப்பு!

யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளி; தற்போதைய நிலவரம் என்ன?

யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளி; தற்போதைய நிலவரம் என்ன?

யாழில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கிய  கஜா புயல்; நேரடி ரிப்போர்ட் இதோ!

யாழில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கிய கஜா புயல்; நேரடி ரிப்போர்ட் இதோ!