தூத்துக்குடியில் நடந்தது போல சேலம் போராட்டத்தில் நடந்துவிட கூடாது - ஸ்டாலின்!

37shares
Image

தூத்துக்குடி போராட்டத்தின் இறுதி நாளில் நடந்ததை போன்று சேலம் மக்கள் போராட்டம் மாறி விடக்கூடாது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

சென்னை - சேலம் 8 வழி பசுமை வழிச்சாலையினை ரூ. 10,000 கோடி செலவில் மாநில அரசின் ஒப்புதலுடன் மத்தியஅரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக 150 கிராமங்களில் உள்ள 8 ஆயிரம் விவசாயநிலங்கள் கையகப்படுத்தப்பட்ட உள்ளன. இதற்கு சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சிலரை கைது செய்து காவல்துறையும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் வழக்கம்போல தமிழக அரசு அமைதி காத்துவரும் நிலையில், பொதுமக்களின் போராட்டம் மிகப்பெரிய அளவிற்கு விஸ்வரூபம் எடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்த நிலையில், இப்பிரச்சனை குறித்து சட்டமன்றத்தில் பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின், தூத்துக்குடியில் நடந்த துயரசம்பவம் போல சேலத்தில் நடந்து விட கூடாது என எச்சரிக்கை விடுத்தார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?