தூங்கிய கணவரின் தலையில் அம்மிக்கல்லை போட்டுக்கொன்ற மனைவி!

107shares
Image

காஞ்சிபுரம் அருகே மதுபோதையில் தகராறு செய்த கணவரை தூங்கிக்கொண்டிருந்த போது, தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியிலுள்ள ராஜன் நகரை சேர்ந்த திருமுருகன் தனியார் உணவு விடுதி ஒன்றில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் தினமும் பணி முடிந்து வீடு திரும்புகையில் மது போதையில், தனது மனைவி சுந்தரியை தாக்கி வந்ததாக தெரிகிறது. அதேபோல நேற்று இரவும் மதுபோதையில் வந்த திருமுருகன் மனைவியை கடுமையாக தாக்கி விட்டு உறங்கியுள்ளார்.

தினமும் நடைபெறும் இத்தகைய செயலால் மனமுடைந்த சுந்தரி, திருமுருகன் தூங்கிய பின்னர் தலையில் அம்மிக்கல்லைபோட்டு கொலை செய்துள்ளார். இரவு முழுவதும் சடலத்துடனே இருந்த சுந்தரி, விடிந்ததும் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?