இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ள ஊழல் மன்னன் நீரவ் மோடி!

31shares
Image

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூலம் சட்டவிரோதமான முறையில் பணப்பரிவர்த்தனை செய்து வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய வைரவியாபாரி நீரவ் மோடி, இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.280 கோடியும், சட்டவிரோதமான பணப்பரிவர்த்தனையின் மூலம் ரூ.11ஆயிரம் கோடியும் ஊழல் செய்துவிட்டு வைரவியாபாரி நீரவ் மோடி(47) வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். இவர் இந்தியா மட்டுமல்லாது ஐரோப்பிய நாடுகளிலும் நகைக்கடைகள் வைத்துள்ளார். இவர் மீது வழக்குபதிவு செய்துள்ள சிபிஐ அதிகாரிகள், கடன் வழங்கிய வங்கி அதிகாரிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன், நீரவ் மோடிக்கு சொந்தமான சொத்துக்களையும் முடக்கம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தப்பி ஓடிய நீரவ் மோடி இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக, பைனான்ஸ் டைம்ஸ் பத்திரிகை நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் நிரவ் மோடி இதுவரை எங்களை தொடர்பு கொள்ளவில்லை என இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக கிங்பிஷர் நிறுவனர் விஜய் மல்லையா ரூ.9 ஆயிரம் கோடிக்கு ஊழல் செய்துவிட்டு இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
அதிவிசேட செய்தி: மீண்டும் மைத்திரியின் திடீர் நடவடிக்கை; அதிர்ச்சியில் ரணில் தரப்பு!

அதிவிசேட செய்தி: மீண்டும் மைத்திரியின் திடீர் நடவடிக்கை; அதிர்ச்சியில் ரணில் தரப்பு!

யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளி; தற்போதைய நிலவரம் என்ன?

யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளி; தற்போதைய நிலவரம் என்ன?

யாழில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கிய  கஜா புயல்; நேரடி ரிப்போர்ட் இதோ!

யாழில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கிய கஜா புயல்; நேரடி ரிப்போர்ட் இதோ!