'ப்ரீடம் 251' ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் கைது!

43shares
Image

புது டெல்லியில் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் பணம் பறித்தல் குற்றத்திற்காக 'ரிங்கிங் பெல்ஸ்' நிறுவன உரிமையாளர் மோகித் கோயல் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம், கடந்த 2016-ம் ஆண்டு உலகின் மிகவும் மலிவான விலையில் மிகசிறந்த ஸ்மார்ட்போனை ரூ.251-க்கு வழங்க உள்ளதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சிலர் ஏமாற்று வேலை என கூறினாலும், பலரும் இதனை ஆர்வத்துடன் ஆர்டர் செய்தனர். இதில் முன்பதிவு தொடங்கிய முதல் நாளில் 30 ஆயிரம் பேர் ஆர்டர் செய்தனர். அவர்களிடமிருந்து தலா ரூ.251 பெற்றுக்கொள்ளப்பட்டது.

மேலும் ரிங்கிங்பெல்ஸ் நிறுவனம் தன்னுடைய ஸ்மார்ட்போனை அமேசான் மூலமும் விற்பனை செய்து வந்தது. இதற்கிடையில் நிறுவனத்தின் நம்பக தன்மை குறித்து அமலாக்க துறையினரும் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், புது டெல்லியில் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் பணம் பறித்தல் குற்றத்திற்காக, 'ரிங்கிங் பெல்ஸ்' உரிமையாளர் மோகித் கோயல் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?