உத்திரபிரதேச மருத்துவர் கபீல் கானின் தம்பி மீது சரமாரி துப்பாக்கி சூடு!

30shares
Image

உத்திரபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறந்தபோது தன்னுடைய சொந்த பணத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கி குழந்தைகளை காப்பாற்றியதற்காக கைது செய்யப்பட்ட மருத்துவர் கபீல் கானின் தம்பி மீது சரமாரி துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக, உத்தர பிரதேச அரசு ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனத்திற்கு பணம் அளிக்காததால் தான் சிலிண்டர் வழங்கப்படவில்லை என்பதை, தன்னுடைய சொந்த பணத்தில் சிலிண்டர் வாங்கி பல குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய மருத்துவர் கபீல் கான், அரசின் உண்மை முகத்தை உலகிற்கு வெளிப்படுத்தினார். இதனால் அவர் கைது செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் ஜாமீனில் வெளிவந்தார்.

இந்தநிலையில் 35 வயது நிரம்பிய அவரது தம்பி காசிப் ஜமீல், நேற்று இரவு இரு சக்கரவாகனத்தில் செல்லும்போது மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார். தற்போது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரது உடலிலிருந்து நான்கு குண்டுகளும் நீக்கப்பட்டுள்ளது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
போதநாயகி வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா? பலத்த சந்தேகத்தைக் கிழப்பியுள்ள கடைசி வரிகள்!!

போதநாயகி வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா? பலத்த சந்தேகத்தைக் கிழப்பியுள்ள கடைசி வரிகள்!!

நாட்டையே உலுக்கிய இளம் பெண் மரணத்துக்கான அதிர்ச்சிக் காரணம் வெளியானது!

நாட்டையே உலுக்கிய இளம் பெண் மரணத்துக்கான அதிர்ச்சிக் காரணம் வெளியானது!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!