விவாத நிகழ்ச்சியில் மோதல் போக்கு ; ஊடக நிறுவனம் மீது வழக்கு பதிவு.!

18shares

முன்னணி தமிழ் செய்தி தொலைக்காட்சியொன்று ஒருங்கிணைத்து நடத்திய விவாத நிகழ்ச்சியில் பாஜக தலைவர் தமிழிசை, இயக்குனர் அமீர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும், பிரபலங்களும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் இயக்குனர் அமீர், உரிமைகளை காத்துக்கொள்ள போராடிய மக்களை சமூக விரோதிகள் என்பவர்களே சமூக விரோதிகள் என பேசியபோது, அவர் பேசக்கூடாது என பிரச்னை செய்தனர் பாஜகவினர்.

அக்கட்சியின் தலைவர் தமிழிசை கட்டுப்படுத்தியபோதும் அவர்கள் அமைதியாகவில்லை. பின்னர், காவல்துறையினரின் அழுத்தத்தின் பெயரில் நிகழ்ச்சி விரைவில் முடிக்கப்பட்டது.

இந்த நிலையில், அந்த விவாத நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்திய தொலைக்காட்சி நிறுவனம் மீதும், அந்த தொலைக்காட்சியின் கோவை மாவட்ட செய்தியாளர் மீதும், திரைப்பட இயக்குனர் அமீர் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.

தொலைக்காட்சி நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்ததற்கு பத்திரிகையாளர் சங்கங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி; இனி ஆங்கிலம் தேவையில்லை!

தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி; இனி ஆங்கிலம் தேவையில்லை!

மடுத்திருத்தலத்தில் பதற்றத்துடன் நேரத்தைக்கடக்கும் பக்தர்கள்!

மடுத்திருத்தலத்தில் பதற்றத்துடன் நேரத்தைக்கடக்கும் பக்தர்கள்!

விடுமுறையில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த கொடுமை!

விடுமுறையில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த கொடுமை!