அடக்குமுறை சட்டங்களால் புரட்சிகளை தடுத்துவிட முடியாது.!

22shares

அரசுகளின் அடக்குமுறை சட்டங்களால் ஒருபோதும் தங்கள் உரிமைகளுக்காக குரலெழுப்பும் மக்கள் புரட்சியினை தடுத்துவிட முடியாது என தெரிவித்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல்.திருமாவளவன்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சுமார் 13 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துவரக்கூடிய சூழலில், தூத்துக்குடி செல்ல முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை கைது செய்து தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளது தமிழக அரசு. சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு அதிகபடியான அழுத்தங்கள் அளிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.

இந்த சூழலில், நேற்றைய தினம் கடலூரில் வேல்முருகன் தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படத்தினை கண்டித்து அனைத்துக்கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், கலந்துகொண்டு பேசிய விசிக தலைவர் திருமா, "தம்பி வேல்முருகன் தொடர்ச்சியாக தமிழர் வாழ்வுரிமை களங்களில் உரக்க குரலெழுப்பி செயல்பட்டுவருபவர். அவரின் தமிழ் மக்களுக்கான உள்ளார்ந்த செயல்பாடுகளே அரசுகளை அச்சுறுத்தியுள்ளது. அதன் காரணமாகவே அவரை தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து முடக்க நினைக்கிறது. ஆனால், மக்களுக்காக குரலெழுப்புபவர்களை ஒருபோது அடக்குமுறை சட்டங்களால் ஒடுக்கி விட முடியாது" என தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்!  உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்! உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?