ரஜினியின் தாய்மொழி கன்னடமா.. மராட்டியமா.!

32shares

நடிகர் ரஜினியின் தாய்மொழி கன்னடமா, மராட்டியமா என கேள்வியெழுப்பியுள்ளார் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடும் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை கர்நாடக அரசு செயல்படுத்த வேண்டுமென தெரிவித்திருந்தார் நடிகர் ரஜினி. ரஜினியின் இந்த கருத்து கர்நாடகத்திற்கு எதிரானது என புரிந்துகொள்ளப்பட்டதால், ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள காலா திரைப்படம் கர்நாடகத்தில் வெளியிடப்படுவதில் சிக்கல்கள் ஏற்பட்டது. அம்மாநில முதல்வரும் கூட தற்போதைய சூழலில் இங்கு காலா திரைப்படத்தினை வெளியிடுவது நல்லதல்ல என எச்சரித்திருந்தார்.

இந்த சூழலில், நேற்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, தனது காலா திரைப்படத்தினை வெளியிட உதவிடுமாறு கர்நாடக மக்களிடம் கன்னடத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ரஜினியின் இந்த செயல் குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மருத்துவர் ராமதாஸ், "காலா படத்தை திரையிட அனுமதி கோரி கர்நாடகத்துக்கு கன்னடத்தில் ரஜினி வேண்டுகோள்: செய்தி - ஆபத்து வந்தால் தாய்மொழியில் தான் கத்துவார்கள் என்பது இதுதானோ? அதுசரி... ரஜினியின் தாய்மொழி கன்னடமா.... மராட்டியமா?" என கேள்வியெழுப்பியுள்ளார்.

முன்னதாக, அரசியல் கட்சி துவங்கவிருக்கும் ரஜினிக்கு மொழி ரீதியிலான எதிர்ப்புகள் அதிகமாக உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்!  உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்! உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!