காலா திரைப்படம் முகநூலில் நேரடி ஒளிபரப்பு ; அதிர்ச்சியில் படக்குழு.!

98shares

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் மும்பை வாழ் தமிழர்களின் வாழ்வுசூழலை அடிநாதமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காலா திரைப்படம் நேற்று சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா உள்ளிட்டநாடுகளில் வெளியானது. இன்று தமிழகம் உள்ளிட்ட இடங்களில் வெளியாகியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடும் விவகாரம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு உள்ளிட்ட விவகாரங்களில் நடிகர் ரஜினி தெரிவித்திருந்த கருத்துக்கள் காலா திரைப்படத்திற்கு எதிராக கிளம்பிய நிலையில், அத்திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டுமென சிலரும், ஒடுக்கப்பட்டோருக்கான அரசியலை பேசும் இயக்குனர் ரஞ்சித்தின் மீதான காழ்புணர்ச்சியின் காரணமாக காலாவை புறக்கணிக்க வேண்டுமென சிலரும் கச்சை கட்டிக்கொண்டு கிளம்பினர்.

இந்த நிலையில், சிங்கப்பூர் கேத்தே திரையரங்கில் இப்படத்தை முதல் ஷோ பார்த்த பிரவீன் என்ற இளைஞர் தனது முகநூல் பக்கத்தில் சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக நேரலையாக ஒளிபரப்பியுள்ளார். இதனையறிந்து அதிர்ச்சியடைந்த படக்குழு, அந்நாட்டு காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில் பிரவீன் கைது செய்யப்பட்டார். அவரிடம் அந்நாட்டு காவல்துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்!  உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்! உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!