போலீசாரை தாக்கிய வழக்கு ; சீமானுக்கு முன் ஜாமீன்.!

22shares

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை சென்னையில் நடத்தக்கூடாது என தமிழ் அமைப்புகள் மற்றும் இயக்கங்களின் சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரை தாக்கியதாக காணொளி காட்சிகள் வெளியான நிலையில் போராட்டத்தை முன்னெடுத்தவர் உள்ளிட்ட பலர் மீது வழக்குகள் பாய்ந்தது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் கைது செய்யப்படக்கூடும் என கருதப்பட்டது. இந்நிலையில், முன் ஜாமீன் கோரி சீமான் செய்திருந்த மனுவினை விசாரித்த நீதிமன்றம், மதுரையில் தங்கியிருந்து அடுத்த 2 வாரங்களுக்கு தல்லாகுளம் காவல் நிலையத்தில் சீமான் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சீமானுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மதிமுகவினருடனான மோதல் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கிலும் சீமானுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்!  உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்! உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!