புலம்பெயர் தமிழர்களின் விபரங்களை திரட்டுகின்றது சிறிலங்கா அரசு!! எதற்கு என்ற அதிர்ச்சியில் தமிழர்கள் !!

310shares

யுத்தம் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறிவெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரி புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களின் பெயர்விபரங்களை திரட்டும் பகீரத முயற்சியில் சிறிலங்கா அரசு ஈடுபட்டுள்ளது குறித்த அதிர்ச்சித் தகவலொன்றுஅம்பலமாகியிருக்கின்றது.

மைத்ரி – ரணில் தலைமையிலானசிறிலங்காவின் தற்போதைய தேசிய அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான சிறிலங்காசுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர்சந்திப்பில் கலந்துகொண்ட அந்தக் கட்சியின் முக்கியஸ்தரான கப்பல்துறை மற்றும் துறைமுகஅபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கின்றார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்றுகூறப்படும் பலர் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளதாக தெரிவிக்கும் அமைச்சர்மஹிந்த சமரசிங்க, உண்மையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்எண்ணிக்கையை அறிந்துகொள்வதற்காகவே வெளிநாட்டு அரசுகளிடம் அந்தந்த நாடுகளில்அரசியல் தஞ்சம் கோரியுள்ள தமிழர்களின் விபரங்களை கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விடையம் தொடர்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேலும் தெளிவுபடுத்துகையில்...

“ காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான பிரச்சனையை எடுத்துக்கொள்வோம.உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஓரளவுக்கேனும் தெரியும். ஆனால் காணாமல்ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை தொடர்ந்த வண்ணமே உள்ளது. இன்னும் அவர்கள் காணாமல்போயுள்ளதாக பிரச்சினை உள்ளதால் அந்தக் கணக்கெடுப்பை பூர்த்திசெய்ய முடியாத நிலைகாணப்படுகின்றது.

பல்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டைவிட்டு வெளியேறி, மேற்குலக நாடுகளில் தஞ்சம் கோரி புகலிடம் பெற்றுள்ளவர்களது பெயர்விபரங்களை வெளிவிவகார அமைச்சின் ஊடாக அந்தந்த நாடுகளிடம் கோரியிருந்தோம். ஆனால்தங்களது சட்டதிட்டங்களுக்கு அமைவாக அந்தப் பெயர் விபரங்களை வழங்க முடியாது என்று கூறிஅவர்கள் தர மறுத்துவிட்டனர்.

சில நாடுகளில் சட்டங்களுக்கு அமைய புகலிடம் பெற்றுள்ளவர்கள்தங்களுக்கு விருப்பம் என்றால் பெயர்களைக்கூட மாற்றிக்கொள்ளக்கூடிய வசதிகள்செய்துகொடுக்கப்பட்டுள்ளன. அப்படியென்றால் யார் புகலிடம் பெற்றிருக்கின்றனர்என்பதை கண்டறிவதும், அவர்களைக் கண்டுபிடிப்பதும் சிரமமாகிவிடும்.

அது மாத்திரமன்றி எமது நாட்டவர்கள் புகலிடம் பெற்றுள்ள நாடுகளும் அவர்களது சட்டத்திட்டங்களுக்கு அமைய தகவல்களை வழங்குவதை விரும்பவில்லை.

உண்மையிலேயே ஜெனிவாவுக்குச்செல்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களின் போதும் எங்கள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றபோதிலும், நாங்கள் கேட்டதகவல்களை தரமறுத்துவரும் நிலையில், காணாமல் போனோர் தொடர்பிலான பல்வேறுகணிப்பீடுகளையும், எண்ணிக்கைகளையும் எவ்வாறு முன்வைக்க முடியும் என்பதை கேட்டிருக்கின்றோம். அவ்வாறுதகவல் வழங்கப்பட்டால் அவர்கள் இங்கே இருக்கின்றார்களா அல்லது இல்லையா, வேறு நாடுகளில்இருக்கின்றார்களா என்பதை கண்டறிய முடியும். அதற்கமைய உண்மையில் காணாமல் போனவர்கள் தொடர்பானபட்டியலைத் தயாரிக்க முடியும்” என்றார் அமைச்சர்

இதையும் தவறாமல் படிங்க
பெரும்பான்மை இல்லாத நிலையில் எதற்காக அரசாங்கத்தில் இருக்க வேண்டும்; மஹிந்தவின் சகா அதிரடி!

பெரும்பான்மை இல்லாத நிலையில் எதற்காக அரசாங்கத்தில் இருக்க வேண்டும்; மஹிந்தவின் சகா அதிரடி!

முல்லைத்தீவில் அரங்கேறிய கொடூரம்! எதுவும் அறியாத 5 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!!

முல்லைத்தீவில் அரங்கேறிய கொடூரம்! எதுவும் அறியாத 5 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!!

அரசாங்கத்தை அமைக்க வழிவிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கண்ணீருடன் கோரிக்கை!

அரசாங்கத்தை அமைக்க வழிவிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கண்ணீருடன் கோரிக்கை!