இலங்கையின் முன்னாள் எம்.பிக்கு மரண தண்டனை! பதற்றத்தில் மஹிந்த தரப்பு? (வீடியோ)

2349shares

துமிந்த சில்வாவின் மரண தண்டனையை ஒருமித்த நிலையில் உறுதி செய்த உயர்நீதிமன்றம், அவருடைய மேன்முறையீட்டை நிராகரித்துள்ளது.

பாரத லக்‌ஷ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலை வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஸ்ரீலங்கா உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் விதித்த மரண தண்டனையை இரத்து செய்யுமாறு கோரி துமிந்த சில்வா உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் தள்ளுபடி செய்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தொழிற்சங்க விவகார ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி அங்கொடை, முல்லேரியா பகுதியில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

உள்ளூராட்சி தேர்தல் தினமன்று கொழும்பில் வைத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரு குழுக்கள் இடையில் ஏற்பட்ட மோதல்களின் போதே இந்த கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றன.

இது தொடர்பான வழக்கில் துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி மரண தண்டனை விதித்து, தீர்ப்பளித்து.

இந்த தீர்ப்புக்கு எதிராக துமிந்த சில்வா உள்ளிட்ட பிரதிவாதிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் நேற்று வழங்கியது.

இந்த தீர்ப்பின் பிரகாரம் துமிந்த சில்வா உள்ளிட்ட மேலும் மூன்று பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ள நீதியரசர்கள் குழாம் அவர்களுக்கான மரண தண்டனையை உறுதிப்படுத்தியது.

வழக்கின் 11 ஆவது பிரதிவாதியான துமிந்த சில்வா மூன்றாவது பிரதிவாதியான தெமட்டகொட சமிந்த மற்றும் 7 ஆவது பிரதிவாதி சரத் பண்டார ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.

வழக்கின் முதலாவது பிரதிவாதியான பொலிஸ் கான்ஸ்டபிள் அனுர துஷாரடி மெல்லை தண்டனையில் இருந்து விடுதலை செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
யாழ்ப்பாணம் சுடலையொன்றில் நிகழ்ந்த அதிசயம்; அதிர்ச்சியில் நெகிழ்ந்துபோன உறவினர்கள்!

யாழ்ப்பாணம் சுடலையொன்றில் நிகழ்ந்த அதிசயம்; அதிர்ச்சியில் நெகிழ்ந்துபோன உறவினர்கள்!

இலங்கையில் நேற்றிரவு மயானத்திற்கு அருகால் சென்றவரை திடீரென்று அடித்துக்கொன்ற கறுத்த உருவம்!

இலங்கையில் நேற்றிரவு மயானத்திற்கு அருகால் சென்றவரை திடீரென்று அடித்துக்கொன்ற கறுத்த உருவம்!

மட்டக்களப்பில் பதற்றமான சூழல்; இந்து ஆலயத்தை அகற்ற சொன்ன முஸ்லீம் அரசியல்வாதி!

மட்டக்களப்பில் பதற்றமான சூழல்; இந்து ஆலயத்தை அகற்ற சொன்ன முஸ்லீம் அரசியல்வாதி!