இந்தியா - ஆப்கான் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டிக்கு பிரதமர் வாழ்த்து!

7shares
Image

இந்தியா - ஆப்கான் அணிகள் மோதும் வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டிக்கு இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பானதொரு ஆட்டத்தினை வெளிப்படுத்தி வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணியை எதிர்கொள்கிறது. பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ள ஷிகர் தவான் 71(69), முரளி விஜய் 21(50), 105 ரன்கள் சேர்த்து சிறப்பானதொரு ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி, "இந்திய அணியுடன் வரலாற்று சிறப்புமிக்க போட்டியை விளையாட ஆப்கானிஸ்தான் தேர்ந்தெடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், விளையாட்டு போட்டி இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் எனவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?