ஸ்ரீலங்கா மீது முடிவெடுப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு எந்தவொரு உரிமையும் கிடையாது!

19shares
Image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஒருவர் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுவதாக கூறப்படும் காணொளியொன்று அல் ஜெஸீரா தொலைக்காட்சி ஊடாக வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனை தொடர்பாக ஆசிய ரீதியலான வலய அரசாங்கங்களுக்கு இடையிலான அமைச்சுக்களுக்கான மாநாடு ஒன்று எதிர்வரும் 18ஆம், 19ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றுக்காலை (08.06.2018) நடைபெற்றது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஒருவர் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுவதாக கூறப்படும் காணொளியொன்றை அல் ஜெஸீரா தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்டிருந்தது.

இது தொடர்பாக விசாரணை செய்வதற்கான முனைப்புக்களை மேற்கொண்ட சர்வதேச கிரிக்கெட் பேரவை, இந்த விவகாரம் குறித்து விளக்கம் கோருவதற்காக ஸ்ரீலங்கா பிரநிதிகளை அழைத்திருந்ததோடு விளையாட்டுத்துறை அமைச்சர் தலமையிலான குழுவொன்று அண்மையில் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது.

இந்நிலையில் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதுகுறித்த விளக்கத்தை அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் வினா எழுப்பினர். அதற்கு பைசர் முஸ்தபா அளித்திருந்த பதில் இவ்வாறு அமைந்திருந்தது.

பைசர் முஸ்தபா (விளையாட்டுத்துறை அமைச்சர்) - ‘எமக்கு கட்டளைத் தெரிவிப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு உரிமையில்லை. நான் மிகவும் சிறந்த கலந்துரையாடலை அண்மையில் நடத்தினேன். அவர்களது கருத்துக்களை முன்வைத்தார்கள். அப்படிப்பட்ட எந்த அழுத்தங்களும் செய்யவில்லை. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னர் தெளிவுபடுத்தல் ஒன்று முன்வைக்கப்படும். அதனை செய்யவே நான் அங்கு சென்றேன். சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர், குழுவினரை இதற்கு முன்னர் நான் சந்தித்திருக்கவில்லை. எனவே போட்டி நிர்ணயம் தொடர்பாகவும் கலந்துரையாடினேன். ஆட்டநிர்ணய சதி குறித்து மேலதிக விசாரணைகளை நடத்துவதற்கான நால்வர் அடங்கிய பொலிஸ் குழுவொன்றை அமைப்பதற்கான அமைச்சரவைக்கு பத்திரமொன்றை முன்வைக்க எதிர்பார்க்கின்றேன். இதுகுறித்த விசாரணைக்கு துறை சம்பந்தப்பட்ட அறிவு அவசியம். உடனடி நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். போட்டி நிர்ணயம் குறித்து அந்தந்த நாடுகளின் உள்நாட்டு சட்டங்களுக்கு அமையவே குற்றவாளிகள் விசாரிக்கப்படுகின்றனர். ஆனால் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அதுகுறித்த தீர்மானத்தை மேற்கொள்வதற்கான எந்த உரிமையும் கிடையாது. ஆனால் புறம்பான விசாரணையை அவர்கள் நடத்தலாம். போட்டி நிர்ணயமானது தேசியளவான குற்றச் செயலாகும். எனவே குற்றவியல் தண்டனை அவசியம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்!  உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்! உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!