சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய திருமணமான நபர் கைது

642shares

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை செவனகல பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தணமல்வில - செவனகல பிரதேசத்தில் 13 வயதான பாடசாலை மாணவியை அவரது வீட்டுக்கு அவ்வப்போது சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய திருமணமான 23 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கடந்த ஆண்டு பாடசாலையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியின் போது சிறுமியுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

மறுநாள் சிறுமியின் வீட்டுக்கு சென்றுள்ள சந்தேக நபர், வெளியில் அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறுமியின் தாய் செவனகல பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி; இனி ஆங்கிலம் தேவையில்லை!

தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி; இனி ஆங்கிலம் தேவையில்லை!

மடுத்திருத்தலத்தில் பதற்றத்துடன் நேரத்தைக்கடக்கும் பக்தர்கள்!

மடுத்திருத்தலத்தில் பதற்றத்துடன் நேரத்தைக்கடக்கும் பக்தர்கள்!

விடுமுறையில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த கொடுமை!

விடுமுறையில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த கொடுமை!