விடுதலைப் புலிகளின் கொள்கலன் ஒன்றை தேடி மீண்டும் அகழ்வு பணிகள்

325shares

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் மீண்டும் அகழ்வு பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொள்கலன் ஒன்று, குறித்த பகுதியில் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, இன்று பிற்பகல் முதல் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த அகழ்வுபணிகள் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதிவாளர் மற்றும் கிராமசேவையாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதே பகுதியில் கடந்த மாதம் நடுப்பகுதியில் இரண்டு நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு எவ்விதமான பொருட்களும் மீட்கப்படாத நிலையில் மீண்டும் இன்றய தினம் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், பிற்பகல் 4.30 மணிவரை எவ்விதமான பொருட்களும் மீட்கப்படாத நிலையில் தொடர்ந்தும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி; இனி ஆங்கிலம் தேவையில்லை!

தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி; இனி ஆங்கிலம் தேவையில்லை!

மடுத்திருத்தலத்தில் பதற்றத்துடன் நேரத்தைக்கடக்கும் பக்தர்கள்!

மடுத்திருத்தலத்தில் பதற்றத்துடன் நேரத்தைக்கடக்கும் பக்தர்கள்!

விடுமுறையில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த கொடுமை!

விடுமுறையில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த கொடுமை!