சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் நிறைவு

26shares

சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

இதனை தொடர்ந்து, சமன் தெய்வம் மற்றும் பூஜை பொருட்கள், புனித விக்கிரகங்கள் என்பன இரத்தினபுரி, பெல்மதுளை ரஜமஹா விகாரைக்கு வாகன தொடரணியாக இன்று எடுத்து செல்லப்பட்டுள்ளது.

லக்சபான வழியாக கிதுல்கலை, யட்டியாந்தோட்டை, கரவனல்ல, அவிசாவளை, இரத்தினபுரி ரஜமகா விகாரைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அத்துடன், அங்கு பூஜைக்காக வைக்கப்பட்டு, எதிர்வரும் டிசம்பர் மாதம் 22ம் திகதி பௌர்ணமி தினத்தில் வழிபாட்டிற்காக சிவனொளிபாதமலைக்கு மீண்டும் கொண்டு வரப்படவுள்ளது.

மேலும், கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஆரம்பமான சிவனொளிபாதமலைக்கான யாத்திரை பருவகாலத்தில் வழமைபோன்று இம்முறையும் பல இலட்சக்கணக்கான யாத்திரீகர்கள் யாத்திரையை மேற்கொண்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?