ஆகக்குறைந்தது ஆனந்த சுதாகரை விடுதலை செய்துவிட்டாவது கிளிநொச்சி வரவும் - மைத்திரியிடம் சார்ளஸ் நிர்மலநாதன் வேண்டுகோள்!

31shares
Image

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இன்னும் உரியவகையில் நிறைவேற்றப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆகக்குறைந்தது அரசியல் கைதியான ஆனந்த சுதாகரையாவது எதிர்வரும் 18ஆம் திகதிக்கு முன்னர் விடுதலைசெய்துவிட்டு கிளிநொச்சி வந்தாலேயே ஜனாதிபதியின் பயணம் சிறப்பானதாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய பாதுகாப்பு நிதியம் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

”உரிமைகள் மறுக்கப்பட்டதாலும் ஒடுக்கப்பட்டதாலுமே உரிமைகள் கோரி தமிழ் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் பலர் இன்னமும் அரசியல் காரணங்களுக்காக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆட்சிமாற்றத்தின் பின்னர் ஜனாதிபதியால் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டன.

ஆனால்இ ஒரேயொரு கைதி மாத்திரமே விடுதலைசெய்யப்பட்டுள்ளார். தன்னைக் கொலைசெய்ய வந்தவரை விடுவித்துவிட்டதாக ஜனாதிபதி அறிவித்தார்.

அதேவேளை பண வசதியுடைய அரசியல் கைதிகள் சிலர் சட்டத்தரணிகள் மூலம் வழக்கை உடைத்து விடுதலையாகியுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோது "சித்திரைப் புதுவருடத்தில் உங்கள் அப்பா உங்களுடன் இருப்பார்'' என ஜனாதிபதி கூறினார்.

புதுவருடமும் முடிந்துவிட்டது. விடுவிப்பு இல்லை. ஜனாதிபதி கூறிய புதுவருடம் எதுவென்று தெரியவில்லை?

தேசிய சிறுவர் பாதுகாப்புத் தொடர்பான நிகழ்வில் கலந்துகொள்ள எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி கிளிநொச்சிக்கு வருகை தரவுள்ளார்.

கிளிநொச்சியில் வாழும் ஆனந்த சுதாகரின் பிள்ளைகளுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றிவிட்டாவது ஆனந்த சுதாகரை 18ஆம் திகதிக்கு முன்னர் விடுதலைசெய்துவிட்டு ஜனாதிபதி வந்தால் சிறப்பாக இருக்கும்.

குடும்பத்தார் சிறைகளில் வாடுவதால் பல குடும்பங்கள் பல வழிகளிலும் துன்பப்படுகின்றன. அவர்களின் வாழ்வில் ஒளி பிறக்கவேண்டும். அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்'' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?