அரசியல் கைதி ஒருவரின் உடல் நலம் கடுமையாக பாதிப்பு

12shares

அநுராதபுரம்சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி ஒருவரின்உடல் நிலை மோசமடைந்துள்ளது.

இராசாபல்லவன் தபோரூபன் என்ற அரசியல் கைதியின் உடல் நிலை மோசமடைந்த நிலையில்சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 9 வருடங்களாகசிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளான யாழ்ப்பாணத்தை சேர்ந்த மதியரசன்சுலக்‌ஷன், இராசதுரை திருவருள், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், இராசாபல்லவன் தபோரூபன்,இராசதுரை ஜெகன், சூரியகாந்தி யெஜச்சந்திரன், கிளிநொச்சியை சேர்ந்த சிவப்பிரகாசம் சிவசீலன்,வவுனியாவை சேர்ந்த தங்கவேல் நிமலன் உள்ளிட்ட 10 கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்னர்.

இவர்களுக்குஅதரவாக கொழும்பு மகசின் மற்றும் கண்டி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளஅரசியல் கைதிகளும் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில்அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்த நடைபவனி இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இன்று காலை பனிக்கன் குளத்திலிருந்து3 ஆம் நாள் நடைபவனியை ஆரம்பித்த நிலையில் அவர்களுக்கு ஆதரவாக இன்று மாங்குளம் ஆட்டோ சங்கத்தினர் மாங்குளம் பொது அமைப்புக்கள்மற்றும் மாங்குளம் மத்திய மகாவித்தியாலய மாணவர்களுக்கும் நடை பவனியில் இணைந்து கொண்டனர்.

இந்தநடைபவனி இன்று மாலை வவுனியாவை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறுகோரி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாவாந்துறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றுமுன்னெடுக்கப்படவுள்ளது.

நாவாந்துறை பொது சந்தைக்குமுன்னால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதையும் தவறாமல் படிங்க
பிரித்தானியாவில் தொடரும் சோகம்; விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

பிரித்தானியாவில் தொடரும் சோகம்; விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

இலங்கை வீடொன்றில் பயங்கரம்! தனியாக இருந்த குழந்தையையும் பாட்டியையும் பறந்துவந்து கொன்ற உயிரினம்!

இலங்கை வீடொன்றில் பயங்கரம்! தனியாக இருந்த குழந்தையையும் பாட்டியையும் பறந்துவந்து கொன்ற உயிரினம்!

”அம்மா என் கண்முன்னே துடிதுடித்து இறந்தார்” யாழில் நேற்றிரவு கொடூரம்: காலை சிக்கிய மூவர்!

”அம்மா என் கண்முன்னே துடிதுடித்து இறந்தார்” யாழில் நேற்றிரவு கொடூரம்: காலை சிக்கிய மூவர்!