100 அடி பள்ளத்தில் வழுக்கி வீழ்ந்த பெண் தொழிலாளி; நடந்தது என்ன?

108shares

மலையகத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளி 100 அடி பள்ளத்தில் வழுக்கி வீழ்ந்து பலியாகியுள்ளார்.

கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் வழுக்கி வீழ்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று மஸ்கெலியாப் பொலிஸார் தெரிவித்தனர்.காட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த 56 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரான சின்னையா தெய்வானை என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் தொழிலாளி இன்று புதன்கிழமை காலை கார்மோர் தோட்டத் தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தபோது 100 அடி பள்ளத்தில் வழுக்கி மஸ்ஸாகலை நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் காட்மோர் ஆற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார் என்று மஸ்கெலியாப் பொலிஸார் தெரிவித்தனர்

சடலத்தை மீட்ட பொலிஸார் அதனைப் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன எனவும் மஸ்கெலியாப் பொலிஸார் மேலும் கூறினர்.

இதையும் தவறாமல் படிங்க
பிரித்தானியாவில் தொடரும் சோகம்; விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

பிரித்தானியாவில் தொடரும் சோகம்; விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

இலங்கை வீடொன்றில் பயங்கரம்! தனியாக இருந்த குழந்தையையும் பாட்டியையும் பறந்துவந்து கொன்ற உயிரினம்!

இலங்கை வீடொன்றில் பயங்கரம்! தனியாக இருந்த குழந்தையையும் பாட்டியையும் பறந்துவந்து கொன்ற உயிரினம்!

”அம்மா என் கண்முன்னே துடிதுடித்து இறந்தார்” யாழில் நேற்றிரவு கொடூரம்: காலை சிக்கிய மூவர்!

”அம்மா என் கண்முன்னே துடிதுடித்து இறந்தார்” யாழில் நேற்றிரவு கொடூரம்: காலை சிக்கிய மூவர்!