வவுனியாவில் புதையல் தோண்ட முற்பட்ட மூவர் விஷேட அதிரடிப்படையினரால் கைது!

16shares
Image

வவுனியா ஈரட்டைபெரியகுளம் பகுதியில் புதையல் தோண்டுவதற்குரிய பொருட்களுடன் வானில் பயணித்த மூவரை நேற்று (10.06) விஷேட அதிரடிப்படையினர் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்த பொருட்களையும் கைப்பற்றியுள்ளர்.

கண்டியிலிருந்து வானில் பயணித்த மூவர் நேற்றையதினம் வவுனியா நகரில் சந்தேகத்திற்கிடமான முறையில் வவுனியா நகர் முழுவதும் பயணித்துள்ளனர்.

இதனையடுத்து மாலை ஈரட்டைபெரியகுளம் எரிபொருள் மீள்நிரப்பு நிலையத்திற்கு அருகே குறித்த வாகனத்தினை விஷேட அதிரடிப்படையினர் திடீர் சோதனை மேற்கொண்ட சமயத்தில் வானிலிருந்து ஸ்கானர் இயந்திரத்தினை கைப்பற்றியுள்ளனர்.

அதன் பின்னர் விஷேட அதிரடிப்படையினர் கைது செய்யப்பட்ட 38,49,42 வயதுடைய மூவரையும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசிகள், வான் என்பவற்றை ஈரட்டைபெரியகுளம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

மேலதிக விசாரணைகளை ஈரட்டைபெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டுவருவதுடன் இன்றையதினம் சந்தேகநபர்களை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?