இன, மத வெறுப்புப் பேச்சுக்களை தவிர்த்துக்கொள்ளுமாறு ஸ்ரீலங்காவிற்கு வலியுறுத்தல்!

27shares
Image

மதம் மற்றும் இன என்பவற்றுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்கள், அவற்றைத் தூண்டும் விதத்தில் கருத்­துக்­களை வெளியிடுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

சகிப்புத் தன்­மையைக் கடை­பி­டித்து குற்­றச் செயல்களைக் கலைவது தொடர்பில் தனது கவ­னத்தைச் செலுத்­துமாறும் ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்து.

மனித உரி­மையைப் பாது­காத்தல், மேம்­ப­டுத்தல் மற்றும் நாட்டின் அடிப்­படை சுதந்­திரம் ஆகி­யவை குறித்து இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள முன்­னேற்­றங்­கள் தொடர்பிலும் தனது பாராட்­டை இலங்கைக்கு தெரிவித்துள்ளது.

ஐரோப்­பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ் வழங்­கப்­பட்­ட­தி­னூ­டாக இலங்கை ஏற்­று­ம­திக்கு பெரு­ம­ள­வி­லான வாய்ப்­புகள் கிடைக்கப் பெற்றன.

ஒரு வருட நிறைவின் பின்னர் இடம்பெற்ற மதிப்பீட்டுக் குழுக் கூட்டம் ஒன்று கடந்த 5 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கை அதிகாரிகள் குழுவுக்கும் இடையில் நடைபெற்றது.

இதன்போதே ஐரோப்பிய ஒன்றியம் இதனைக் கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?