மன்னாரில் மீன் பிடிக்கச்சென்ற சகோதரர்களுக்கு நடந்தது என்ன?

53shares
Image

தலைமன்னார் கடற்பகுதியூடாக நேற்று (08.06.2018) வெள்ளிக்கிழமை காலை மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரு மீனவர்களை காணவில்லை என உறவினர்கள் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்.....

கடந்த வெள்ளிக் கிழமை தலைமன்னார் மேற்கு கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்களான தோ. கிறிஸ்ரின் கூஞ்ஞ , தோ.எமல்ரன் கூஞ்ஞ ஆகிய இரு சகோதரர்களும் சம்பவம் அன்று காலை கடலில் போடப்பட்ட நண்டு வலையை கரை சேர்ப்பதற்காக ஒரு படகில் சென்றுள்ளனர்.

ஆனால் இது வரை இவர்கள் கரை சேராதமையால் தலைமன்னார் மேற்கு மீனவ சமூகம் பத்து படகுகளில் நாற்பது மீனவர்கள் கடலில் தேடுதலை தொடர்ந்து மேற்கொண்டும் குறித்த மீனவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை .

இவர்களுடைய படகு இயந்திரம் பழுதடைந்திருந்தால் வட கடலிலே இவர்கள் தொழிலை மேற்கொண்டதால் இவர்கள் யாழ் பகுதி அல்லது இந்திய கடல் பக்கமே சென்றிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதால் இப்பகுதிகளை நோக்கியே இவ் தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஓரிரு தினங்களாக தலைமன்னார் கடல் பகுதியில் கடும் காற்றும் கடல் கொந்தளிப்பும் காணப்பட்டபோதும் இவர்கள் கடலில் போடப்பட்ட தங்களுடைய வலைகளுக்கு எந்தவித சேதமும் ஏற்பட கூடாது என்ற நோக்கத்துடனேயே தங்கள் வலை தொகுதியை காப்பாற்றுவதற்காக கடும் காற்றிலும் கடலுக்குச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரனைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?