வடக்கு கிழக்கு இணைந்த தாயகம்தான் தமிழர்களின் தீர்வென்பதனை ஏற்றுக்கொள்கின்றோம்!

48shares
Image

வடக்கு கிழக்கு இணைந்த தாயகம்தான் தமிழர்களின் தீர்வென்பதனை ஏற்றுக்கொள்கின்றோம் என கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் இணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு தமிழர் ஒன்றியம் கிழக்குக்கு மாத்திரமானதோ வடக்குக் கிழக்கு இணைப்புக்கு எதிரானதொரு சக்தியோயல்ல, நாங்கள் வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் தான் தமிழர்களின் தீர்வென்பதனை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் அது கிடைக்கப்பெறும் வரையில் கிழக்கு மாகாணத்தினை கிழக்கு மாகாணமாக வைத்துக் கொள்ள வேண்டும், அப்போதுதான் ஏதாவது நன்மையிருக்கும் என்று கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் இணைப்பாளர்களான சிரேஸ்ட சட்டத்தரணி த.சிவநாதன் , செங்கதிரோன், த.கோபாலகிருஸ்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம் (09.06.2018) மட்டக்களப்பு முகத்துவாரத்திலுள்ள சூழலியல் கற்கைகள் நிலைய மண்டபத்தில் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் செயற்பாடுகள் குறித்து நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

குறித்த ஊடக சந்திப்பில், கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைவர் பேராசிரியர் மா.செல்வராஜா, செயலாளர் எந்திரி வ.பரமகுருநாதன், ஊடக இணைப்பாளர் த.ஈஸ்வரராஜா உள்ளிட்டோரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?