வவுனியாவில் குடிநீருக்காக அமைக்கப்பட்ட நீர்த் தேக்கத்தில் சட்டவிரோத மீன்படி

12shares
Image

வவுனியாவில் குடிநீருக்காக அமைக்கபட்ட நீர் தேக்கத்தில் சட்டவிரோதமாக மீன்பிடிக்கப்படுவதாக வவுனியா சாஸ்திரிகூழாங்குள மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சட்டவிரோதமான மீன்பிடிச் செயற்பாடுகளினால் மீன்கள் இறந்து மிதப்பதனால் நீர் மாசடைவதாகவும் அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் பகுதியில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் வவுனியா மக்களிற்கான குடி நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நீர் தேக்கம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகின்றது.

நீர் பாசன வடிகாலமைப்பு சபையின் மேற்பார்வையில் 900 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கபட்டு வரும் குறித்த நீர் தேக்கம் இன்னும் ஓரிரு மாதங்களில் பாவனைக்கு வரவுள்ளது.

குறித்த நீர் தேக்கம் குடி தண்ணீருக்காக மட்டுமே அமைக்கப்பட்டு வருகின்றது.

நீர்தேக்கம் அமைப்பதற்காக அதனை சுறியுள்ள கிராம மக்கள் தமது புர்வீக விவசாய காணிகளை வழங்கிஉள்ளனர்.

இந்நிலையில் வெளி மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் வள்ளங்களை

பயன்படுத்தி மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தடை செய்யபட்ட தங்கூசி வலைகளை பயன்படுத்தி மீன் பிடியில்

ஈடுபடுவதுடன் டைனமற் பாவிக்கப்பட்டும் மீன் பிடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் மீன்கள் இறந்து மிதப்பதுடன் நீர் மாசடைகின்ற நிலமையும் காணப்படுகிறது.

வெளி மாவட்டத்தை சேர்ந்த சகோதர இனத்தவருக்கு மீன் பிடியில் ஈடுபடுவதற்கு யார் அனுமதி கொடுத்தனர் என பிரதேச மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன் மீன் பிடியில் ஈடுபடும் சகோதர இனத்தை சேர்ந்தவர்கள் பெண்களுடன் தவறாக நடக்க முற்படும் சந்தர்பங்களும் பல இடம்பெற்றுள்ளதாக கிராம வாசிகளால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?