மன்னார் மனிதப்புதைகுழியை அகழும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

15shares
Image

மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்துள்ள சதோச வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனிதப்புதைகுழியை அகழும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அகழ்வு பணிகள் மீண்டும் எதிர்வரும் 11 ஆம் திகதி காலை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்துள்ள சதோச வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் கடந்த 10 நாட்களாக தொடர்ந்தும், மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில்இடம்பெற்று வந்தன.

10 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் இன்று (08.06.2018) வெள்ளிக்கிழமை மதியத்துடன் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

இதன் போது விசேட சட்ட வைத்திய நிபுனர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர் களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினர, விசேட தடவியல் நிபுனத்துவ பொலிஸார் , மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டிருந்ததோடு யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களும் பயிற்ச்சி நிலை வைத்திய அதிகாரிகளும் இணைத்துக்கொள்ளப்பட்ட நிலையில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வந்தது.

தொடர்ச்சியாக இடம் பெற்று வந்த அகழ்வு பணிகளின் போது மனித எலும்புகள், மண்டையோடுகள் என்பன மீட்கப்பட்டன.

இந்த நிலையில் 10 ஆவது நாளாக இன்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டு வந்த அகழ்வு பணிகள் இன்று வெள்ளிக்கிழமை மதியத்துடன் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணிக்கு அகழ்வு பணிகள் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?