யாருக்காவது துணிவிருக்கா? சுமந்திரன் எம்.பி கேள்வி

769shares

இந்த அரசாங்கத்தை நல்லாட்சி அரசாங்கம் என நான் எப்போதும் கூறியதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்.

நான் ஒரு போதும் இந்த அரசாங்கத்தை நல்லாட்சி அரசாங்கம் என சொல்லவில்லை. ஆனால் மக்கள் மத்தியில் ஒரு பிரமை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

அவரசமாக எதிர் மாற்றம் தேவை என்றே நாங்கள் மேடை மேடையாக சொன்னோம். எங்களுக்கு அவசரமாக எதிர் மாற்றம் தேவையாக இருந்தது.

வீடு பற்றி எரிகிறது வீட்டுக்குள் இருப்பவர்கள் எழும்பி வெளியே ஓட வேண்டும் என கேட்கின்றார்கள். அதான் அந்த தேர்தல்.

ஓட வேண்டாம் எரிகிற வீட்டினுள் இருந்து சாகுங்கள் என்பது தான் தேர்தலை பகிஸ்கரிக்க கோரியவர்களின் கோரிக்கை. அப்படி செத்தால் தான் இன வழிப்புக்கு மேலும் கூடுதல் ஆதாரம் கிடைக்கும் என நம்பினார்கள்.

இந்த அரசாங்கத்தை கொண்டு வந்ததற்கு பல விமர்சனங்கள் உண்டு. அவை அனைனத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். சொன்ன எதனையும் அரசாங்கம் செய்யவில்லை.

ஆனால் 2005ஆம் ஆண்டு மஹிந்தவை ஆட்சிக்கு கொண்டுவந்தவர்கள்? தொடர்பில் கேள்வியை கேட்க யாருகாவது துணிவிருக்கா? அதனை விட மோசமான காரியமா நாங்கள் செய்துள்ளோம்?

நாங்கள் சொல்லும் உண்மையை வெளியில் சொல்லுங்கள். சொல்லாததை சொல்லாதீர்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?