களத்தில் குதிக்கத் தயாராகும் சர்வதேசம் - பாராளுமன்ற கலைப்புச் செய்தியின் எதிரொலி!!

982shares

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்றைய தினம் நள்ளிரவுடன் கலைக்கப்படலாம் என்று கொழும்பு அரசியலில் வேகமாக பரவி வரும் தகவல்களை அடுத்து பெரும் பதற்றமான நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது.

நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற செய்தி வேகமாக பரவி வருவது குறித்த தகவலை ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினரான ஹர்ஷ டி சில்வாவும் தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்குத் தேவையான 113 உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டிக்கொள்ள முடியாததை அடுத்தே மைத்ரி – மஹிந்த கூட்டணி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், அதனாலேயே அவச அவசரமாக அமைச்சர்களை நியமித்து வருவதாகவும் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டிருக்கின்றார்.

அதேவேளை இதன் மூலம் பொதுத் தேர்தலொன்று நடைபெறும் போது முழுமையான அரச அதிகாரங்களை பயன்படுத்திக்கொள்வதற்கும் மைதரி – மஹிந்த குர்டணி திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள ஹர்ஷ டி சில்வா, இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஜனநாயகத்திற்கு விரோதமானவை என்றும் கூறியுள்ளார்.

அதேவேளை இந்த நடவடிக்கைகளால் சிறிலங்காவிற்கு முன்னால் ஜனநாயக நாடு என்ற நாமம் இல்லாதுபோய்விடும் என்றும் ஹர்ஷ அச்சம் வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்த இந்தத் தகவல்களால் கொழும்பிலுள்ள வெளிநாட்டு ராஜதந்திரிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருப்பதாக ராஜதந்திரத் தகவல்கள் கூறுகின்றன.

ஏற்கனவே மஹிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக நியமித்தமை மற்றும் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தமை தொடர்பில் கடும் ஆத்திரத்துடன் காணப்படும் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட மேற்குலக நாடுகள், நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதால், அதனை செய்ய வேண்டாம் என்று சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவிற்கு நேரடியாக தொடர்புகொண்டு கேட்டுக்கொண்டுள்ள அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் தெளிவுபடுத்தி கடுமையான எச்சரிக்கைகளையும் விடுத்திருப்பதாக நம்பகரமானத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிப்பதற்குத் தேவையான 113 பேரின் ஆதரவை திரட்டிக்கொள்வதில் மைதரி – மஹிந்த கூட்டணி தொடர்ந்தும் பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளது.

இதனாலேயே நேரடியாக அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகளிள் தலைவர்கள் உள்ளிடட நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து மஹிந்தவிற்கு ஆதரவு வழங்குவதற்காக பேரம் பேசியதாகவும் மைத்ரி – மஹிந்த தரப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

எனினும் இந்த முயற்சியும் தோல்வியடைந்த நிலையில் வேறு வழியின்றி நாடாளுமன்றத்தை கலைப்பது என்ற முடிவிற்கு அவர் தள்ளப்பட்டிருப்பதாகவும் பெயரைக் குறிப்பிட விரும்பாத மஹிந்த ராஜபக்சவின் மிக நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.


இதையும் தவறாமல் படிங்க
பொலிஸ் மா அதிபருக்கு பிறபிக்கப்பட்ட அதிரடி உத்தரவு!

பொலிஸ் மா அதிபருக்கு பிறபிக்கப்பட்ட அதிரடி உத்தரவு!

லசந்தவின் மகள் கண்ணீருடன் மைத்திரிக்கு எழுதிய உருக்கமான கடிதம்!

லசந்தவின் மகள் கண்ணீருடன் மைத்திரிக்கு எழுதிய உருக்கமான கடிதம்!

மகிந்தவை காப்பாற்றிய தமிழர் யார் தெரியுமா? பலருக்கும் தெரியாத உண்மை!!

மகிந்தவை காப்பாற்றிய தமிழர் யார் தெரியுமா? பலருக்கும் தெரியாத உண்மை!!