கிம் ஜாங் உன்னால் வருமானம் பெறும் நபர்: யார் அந்த நபர்?

42shares
Image

உலகமே வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சந்திப்பை எதிர் நோக்கியுள்ள நிலையில் அவர்களது சந்திப்பு நிகழவிருக்கும் அதே நாளில் இன்னொரு நபரும் மக்கள் முன் தோன்றி பரபரப்பை ஏற்படுத்த இருக்கிறார்.

கிம் ஜாங் உன்னால் பலர் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவரை வைத்து நல்ல பிழைப்பு நடத்தும் ஒருவரும் இருக்கிறார், ஹாங்காங்கில் பிறந்து அவுஸ்திரேலியாவில் வாழும் Howard X என்று தன்னையே அழைத்துக் கொள்ளும் கிம் ஜாங் உன்னைப் போலவே தோற்றமளிக்கும் நபர்தான் அவர்.

கடந்த வாரம் திடீரென்று சிங்கப்பூரில் தோன்றி சாலையில் நடந்து பரபரப்பை ஏற்படுத்திய பின் சமூக ஊடகங்களின் கண்ணில் பட்ட அவர் தற்போது மீண்டும் சிங்கப்பூரில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வருகையின்போது தோன்ற இருக்கின்றார்.

ஏற்கனவே குளிர்கால ஒலிம்பிக்கின்போது விளையாட்டு மைதானத்தில் தோன்றி வட கொரிய சியர் லீடர் பெண்களைக் குழப்பிய அவர் பின்னர் பொலிசாரால் அங்கிருந்து அகற்றப்பட்டார்.

டிரம்பைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு நபருடன் அவர் இணைந்து தோன்றுவதற்காக சிங்கப்பூர் ஹோட்டல் ஒன்று அவரை பணிக்கமர்த்தியுள்ளது.

இவ்வளவு பிரபலமானாலும் அவரது குடும்பத்தினர் மட்டும் தயவு செய்து இசகு பிசகாக மாட்டி உயிரை விட்டு விடாதே என்று எச்சரிக்கிறார்களாம்.

இசைக் கலைஞரான Howard X, பின்னர் 2012 முதல் கிம்மைப் போல நடிப்பதையே முழு நேரப் பணியாக செய்ய ஆரம்பித்தார்.

ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு முன்னும் தன் புருவங்களை ட்ரிம் செய்வதோடு, நீண்ட நேரம் செலவிட்டு ஏராளமான ஸ்பிரே அடித்து கிம்மின் ஊசி போல் நிற்கும் ஹேர் ஸ்டைலைக் கொண்டு வருகிறார்.

கிம்மைப் போலவே தடித்த கண்ணாடி, கருப்பு சூட் மற்றும் வட கொரிய கொடி பேட்ஜ் ஒன்று என வேடமிடும் Howard X, கிம்மைப் போலவே பிறந்ததற்காக கடவுளுக்கு நன்றி என்கிறார், ஏனென்றால் அவரால்தானே இவருக்கு பிழைப்பு நடக்கிறது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?