பெண்ணிடம் அத்து மீறி நடந்தாரா கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க? பிரபல பாடகி சின்மயி வெளியிட்ட தகவலால் பரபரப்பு!

54shares
Image

பெண் ஒருவரிடம் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா அத்துமீறி நடந்து கொண்டதாக சின்மயி தெரிவித்துள்ளார்.

வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என பாடகி சின்மயி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவருக்கு டான்ஸ் மாஸ்டர் கல்யான் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதே போல பல பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக டுவிட்டரில் பிரபலங்கள் பெயர்களை அவர் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் பெண் ஒருவர் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறிய பதிவை சின்மயி ஷேர் செய்துள்ளார்.

அதில், சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் மும்பையில் இருந்தேன். அப்போது நான் தங்கியிருந்த ஹொட்டலில் என் தோழியும் தங்கியிருந்ததால் அவரை தேடினேன்.

அப்போது ஐபிஎல் சீசனில் பிரபலமாக இருந்த இலங்கை வீரர் என்னிடம் வந்து உங்கள் தோழி என் அறையில் இருப்பதாக கூறினார்.

இதையடுத்து நான் அங்கு சென்றபோது தோழி அங்கு இல்லை. அப்போது கிரிக்கெட் வீரர் என்னை படுக்கையில் தள்ளி என் முகம் அருகில் வந்தார்.

அவர் வாட்ட சாட்டமாக இருந்ததால் அவரை எதிர்த்து என்னால் போராட முடியவில்லை. அப்போது ஹொட்டல் ஊழியர் கதவை தட்டினார், பின்னர் அவர் கதவை திறந்தவுடன் நான் வெளியே ஓடிவிட்டேன்.

இதை வைத்து அந்த வீரர் பிரபலமானவர் என்பதால் நான் வேண்டுமென்றே அவர் அறைக்கு சென்றதாக கூட சிலர் கூறலாம் என தெரிவித்துள்ளார்.

இவை அனைத்தும் சின்மயி தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளாரே தவிர இந்த செய்தி தொடர்பான உண்மைத்தன்மை தெளிவாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
இலங்கை வீடொன்றில் பயங்கரம்! தனியாக இருந்த குழந்தையையும் பாட்டியையும் பறந்துவந்து கொன்ற உயிரினம்!

இலங்கை வீடொன்றில் பயங்கரம்! தனியாக இருந்த குழந்தையையும் பாட்டியையும் பறந்துவந்து கொன்ற உயிரினம்!

பிரித்தானியாவில் தொடரும் சோகம்; விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

பிரித்தானியாவில் தொடரும் சோகம்; விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

யாழில் இடம்பெறவிருந்த பாரிய விபத்து; அதிகாரிகளின் செயற்பாட்டால் காப்பாற்றப்பட்ட பல உயிர்கள்!

யாழில் இடம்பெறவிருந்த பாரிய விபத்து; அதிகாரிகளின் செயற்பாட்டால் காப்பாற்றப்பட்ட பல உயிர்கள்!