தன்னுயிரை கொடுத்து பல உயிர்களை காப்பாற்றிய இளம் பெண்; சோகமான தலைநகரம்!

264shares

தீ விபத்தில் இருந்து பல உயிர்களை காப்பாற்றுவதற்காக ஒரு பெண் தன்னுயிரை இழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி அருகே உள்ள குர்கான் நகரில் 10 மாடிகள் கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் கடந்த 07.10.2018 நள்ளிரவு 2 மணி அளவில் மின்சார கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு புகை வெளியேறியது.

அப்போது 5-வது மாடியில் உள்ள தனது வீட்டில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த 32 வயது சுவாதி கார்க் என்ற பெண் தீ விபத்து ஏற்பட்டு இருப்பதை உடனடியாக உணர்ந்து கொண்டார். இதையடுத்து மின்னல் வேகத்தில் செயல்பட்ட அவர் ஒவ்வொரு தளத்தில் வசிப்பவர்களையும் தட்டி எழுப்பி மேல் தளத்துக்கு செல்ல அறிவுறுத்தினார். அவர்களும் வீட்டை விட்டு வெளியேறி மொட்டை மாடிக்கு சென்றனர். அதேபோல் சுவாதியின் கணவரும், குழந்தையுடன் மொட்டை மாடிக்கு சென்று உயிர் தப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீ விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைக்கும் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்த நிலையில் இதற்கிடையே வெகு நேரமாகியும் சுவாதி கார்க் மட்டும் மொட்டை மாடிக்கு வரவில்லை. இதுபற்றி தீயணைக்கும் படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சுவாதி கார்க்கை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 10-வது மாடியில் பூட்டப்பட்டிருந்த ஒரு வீட்டின் கதவு அருகே அவர் இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பலரை பாதுகாப்பாக அப்புறப்படுத்திவிட்டு கடைசி நபராக அவர் மொட்டை மாடிக்கு செல்ல முயன்றுள்ளார். ஆனால், அவர் அங்கிருந்த கதவை திறக்க முடியாததால் புகை மூட்டத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிர் இழந்துவிட்டதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல உயிர்களை காப்பாற்றுவதற்காக ஒரு பெண் தன்னுயிரை இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
யாழ்ப்பாணம் சுடலையொன்றில் நிகழ்ந்த அதிசயம்; அதிர்ச்சியில் நெகிழ்ந்துபோன உறவினர்கள்!

யாழ்ப்பாணம் சுடலையொன்றில் நிகழ்ந்த அதிசயம்; அதிர்ச்சியில் நெகிழ்ந்துபோன உறவினர்கள்!

இலங்கையில் நேற்றிரவு மயானத்திற்கு அருகால் சென்றவரை திடீரென்று அடித்துக்கொன்ற கறுத்த உருவம்!

இலங்கையில் நேற்றிரவு மயானத்திற்கு அருகால் சென்றவரை திடீரென்று அடித்துக்கொன்ற கறுத்த உருவம்!

யாழில் பெண் கிராமசேவகரின் அருவருக்கத்தக்க செயல்! பலர் முகம்சுழிப்பு!!

யாழில் பெண் கிராமசேவகரின் அருவருக்கத்தக்க செயல்! பலர் முகம்சுழிப்பு!!