எண்ணெய் பாக்கெட்டில் செத்து கிடந்த எலி ; அதிர்ச்சியில் பொதுமக்கள்.!

46shares
Image

சேலத்தில் கடலை எண்ணெய் பாக்கெட்டில் எலி செத்துக்கிடந்ததால், எண்ணெய் விற்கப்பட்ட மளிகை கடையில், உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் பைத்தூர் கிராமத்தை சேர்ந்த குமரவேல், ராணிப்பேட்டையில் உள்ள லக்க்ஷமி ஸ்டோர்ஸ் என்ற மளிகை கடையில் கடலை எண்ணெய் வாங்கியுள்ளார். அதனைத்தொடர்ந்து எண்ணெய் பாக்கெட்டை பிரித்து பார்த்த போது அதில் எலி இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த குமரவேல், இது குறித்து அவர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினரிடம் புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறையினர் சம்பந்தப்பட்ட மளிகை கடை மற்றும் எண்ணெய் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

எண்ணெய் பாக்கெட்டில் எலி செத்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை உண்டாக்கியுள்ளதுடன், உணவுத்துறை அதிகாரிகள் இத்தகைய விவகாரங்கள் குறித்து மேலதிக ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டுமென்பதுவே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
பெரும்பான்மை இல்லாத நிலையில் எதற்காக அரசாங்கத்தில் இருக்க வேண்டும்; மஹிந்தவின் சகா அதிரடி!

பெரும்பான்மை இல்லாத நிலையில் எதற்காக அரசாங்கத்தில் இருக்க வேண்டும்; மஹிந்தவின் சகா அதிரடி!

முல்லைத்தீவில் அரங்கேறிய கொடூரம்! எதுவும் அறியாத 5 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!!

முல்லைத்தீவில் அரங்கேறிய கொடூரம்! எதுவும் அறியாத 5 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!!

மைத்திரியின் திடீர் அந்தர் வெல்டி; அதிர்ச்சியில் ரணில்; இலங்கை அரசியலில் தொடர் பரபரப்பு!

மைத்திரியின் திடீர் அந்தர் வெல்டி; அதிர்ச்சியில் ரணில்; இலங்கை அரசியலில் தொடர் பரபரப்பு!