தமிழக முதல்வர் தூத்துக்குடி செல்லும் திட்டம் இல்லை- அமைச்சர் செல்லூர் ராஜு!

4shares
Image

தமிழக முதல்வர் பழனிச்சாமி தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க செல்லும் திட்டம் இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் கடந்த மாதம் 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக நடைபெற்ற மிகப்பெரிய போராட்டத்தின் போது, அப்பாவி பொதுமக்கள் 13 பேர் தமிழக காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் ஏராளமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை தமிழக முதல்வர் பழனிச்சாமி கடந்த 9-ம் தேதி நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, முதல்வர் பழனிச்சாமி தூத்துக்குடி செல்வதாக எவ்வித திட்டமும் இல்லை என தெரிவித்தார். மேலும், ஒரு தலைவர் இறந்த பிறகு பல கட்சிகள் உருவாவது இயல்பே. திவாகரன் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என திவாகரன் கட்சி ஆரம்பித்தது குறித்து பேசினார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?