இஸ்லாமியர்கள் என் அலுவலகத்திற்குள் வரக்கூடாது: பாஜக எம்எல்ஏ சர்ச்சை!

16shares
Image

என்னுடைய அலுவலகத்திற்குள் தாடி வைத்துக்கொண்டும், புர்கா அணிந்துக்கொண்டும் யாரும் வரக்கூடாது என கர்நாடக பாஜக எம்.எல்.ஏ பாசனகவுடா கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியில் பாஜக அரசு ஆட்சி அமைத்ததில் இருந்தே, அதன் உறுப்பினர்களும், கட்சி தலைவர்களும் பொது இடங்களில் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக சமீபத்தில் கூட பிரதமர் நரேந்திர மோடி, பொது வெளியில் பேசும்பொழுது பாஜகவினர் கவனமாக பேச வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். ஆனாலும் பாஜகவினரின் சர்ச்சை பேச்சுக்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், கர்நாடக பாஜக எம்.எல்.ஏ பாசனகவுடா அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில், மக்கள் பிரதிநிதிகளும், கார்ப்ரேட் நிறுவனங்களும் இந்துக்களுக்காக தான் வேலை செய்யவேண்டும். இஸ்லாமியர்களுக்கு வேலை செய்ய கூடாது என கூறினார்.

மேலும், தேர்தலில் நான் இந்துக்கள் வாக்குகளால் தான் வெற்றி பெற்றேன், இஸ்லாமியர்களால் இல்லை. எனவே, என்னுடைய அலுவலகத்திற்கு தாடி வைத்துக்கொண்டும், புர்கா அணிந்துக்கொண்டும் யாரும் வரக்கூடாது என மிரட்டும் தொனியில் பேசினார். பாஜக எம்எல்ஏவின் இத்தகைய சர்ச்சை கருத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?